திருக்கோயில்


நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட இந்த பழமையான கப்பேலார் குல பெரிய இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் நெல்லுகுப்பம்மன் திருக்கோயில், பொள்ளாச்சியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள குள்ளக்காபாளையத்தில் உள்ளது. இத்திருக்கோவிலை குள்ளக்காபாளையத்தைச் சேர்ந்த திரு.K.N.நஞ்சன் செட்டியாரால் கட்டப்பட்டு அவர் குடும்பத்தினர் மற்றும் அவ்வூரைச்சேர்ந்த கப்பேலார் குல அண்ணன்  தம்பிமார்களால் இதுநாள் வரை நித்ய பூஜை, புனஸ்கரங்கள் செய்து பராமரிக்கப்பட்டு வந்தனர். கோவில் நிர்வாகம்  இதற்குண்டான அரசு ஆவணங்கள், பதிவேடுகளை அத்தாட்சியாக வைத்துள்ளது.  

சென்ற ஆண்டு 22.02.2015 ஞாயிற்றுக்கிழமை 100 -ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ஜூர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் மூன்று நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

வருடத்திற்கு ஒருமுறை மஹா சிவராத்திரி அன்று மாங்கல்ய வரி செலுத்துவோர்கள் மற்றும் உள்ளூர் மக்கள், எங்கிருந்தாலும் ஒன்று கூடி "மஹா சிவராத்திரி மஹோத்ஸவம்" வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

முதல் நாள் மஹா சிவராத்திரியன்று  சக்தி அழைத்தல், கத்தி போடுதல், கால பூஜை, பள்ளைய பூஜைகளுடன், அன்னதான விருந்தும், மறுநாள் அமாவாசை பூஜை மற்றும் அன்னதானத்துடன் நிறைவு  செய்யப்படுகிறது. இதே போன்று ஒவ்வொரு மாத சிவராத்திரியன்றும், கட்டளைதாரர்களால்  அமாவாசை பூஜை அன்னதானத்துடன் நடைபெற்று வருகின்றது.

நூறாம் ஆண்டு நிறைவு விழாவிற்குப் பிறகு, கப்பேலார் குல மக்கள் ஒன்று திரண்டு   எண்ணிக்கை வலுப்பெற்றது. பக்தர்களின் வருகை அதிகரித்ததால் இத்திருகோயிலை நிர்வகித்து வந்த பெரியோர்கள், மற்றும் மாங்கல்யவரி செலுத்துவோர் மகாஜனக்கூட்டத்தில் கோயிலின் பெயரில் அறக்கட்டளை ஏற்படுத்த தீர்மானித்தனர்.
 
அதன்படி, 2015 -ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16-ஆம் நாள் நெகமம் சார்பதிவாளர் அலுவலகத்தில் "அருள்மிகு பெரிய இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் நெல்லுகுப்பம்மன் திருக்கோயில் டிரஸ்ட்" பெயரில் பதிவு செய்யப்பட்டது. பதிவு எண்: 6/BK4/2015.
 

 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக