புதன், மார்ச் 16, 2016

நிகழ்வுகள்

 
ஒபாமாவிடமிருந்து அமெரிக்காவின் உயரிய விருது வாங்கும் 6 இந்தியர்கள்!

அமெரிக்க அதிபர் ஒபாமா தனது பதவி காலம் முடிவதற்க்குள் அறிவியல் மற்றும் தொளினுய்ப துறைகளை சேர்ந்த 106 வல்லுனர்களை சிறப்பிக்க விரும்பியுள்ளார். அமெரிக்காவின் உயரிய விருதுகளில் ஒன்றான இளம் சுயாதீன ஆய்வாளர்கள் விருதை தகுதி பெற்றவர்களில் 6 அமெரிக்க வாழ் இந்தியர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்த விருதானது 1996-ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் மூலம் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருதை பெரும் 6 அமெரிக்க வாழ் இந்தியர்கள்:

 மிலிந்த் குல்கர்னி
இணை பேராசிரியர், மின் மற்றும் கணினி பொறியியல் பள்ளி, பர்து பல்கலைக்கழகம். இவரது ஆராய்ச்சி புரோகிராமிங் மொழிகள் மற்றும் கம்பைலர்களைப் பற்றியது.
 
 கிரண் முசுருனு
ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் ஸ்டெம் செல் மற்றும் மறு உற்பத்தி உயிரியல் துறையில் உதவி பேராசிரியராக இருக்கும் இவர் நிரந்தரமாக கொழுப்பின் அளவை குறைக்க ஒரு மரபணு எடிட்டிங்' அணுகுமுறையை உருவாக்கியவர் ஆவார். 
 
 சச்சின் பட்டேல்
வண்டேர்பிளிட் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் மனநோய், மூலக்கூறு உடலியங்கியல் மற்றும் உயிரி இயற்பியல் ஆகிய துறைகளில் உதவி பேராசிரியர். இவரின் ஆய்வு உளவியல் சீர்கேடுகளில் மூளையின் செயல்பாடும், சிக்கலான பங்கும் பற்றியதாகும்.

 விக்ரம் ஷாம்
நாசாவின் க்ளென் ஆராய்ச்சி மையத்தில் பணி புரிகிறார். பையோமெடிக்ஸ், ஆற்றல் அறுவடை, இயந்திர ஓட்ட இயற்பியல், ஓட்டம் காட்சிப்படுத்தல், மற்றும் நீர் சுத்திகரிப்பு கணிப்பு ஆகிய பல துறைகளில் ஆய்வு செய்கிறார். 

 ஷேவெடக் படேல்
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் மற்றும் மின் பொறியியல் பேராசிரியர். புதிய சென்சார் அமைப்புகள் மற்றும் புதிய தொடர்பு தொழில்நுட்பங்கள் குறித்து ஆய்வு செய்பவர்.
 
 ராகுல் மன்கரம்
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மின் முறைமை மற்றும் பொறியியல் துறையில் இணை பேராசிரியர். வலைப்பின்னலுக்குள் பதிக்கப்பட்ட அமைப்புகளுள் நிகழ் நேர திட்டமிடல்களுக்கான வழிமுறைகளை பற்றிய ஆய்வில் ஈடுபடுபவர். 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக