வியாழன், மார்ச் 17, 2016

நிகழ்வுகள்


ஆளில்லாமல் இயங்கும் தானியங்கி கார் ஒன்றை உருவாக்கி அசத்திய இந்தியர்!
தனியார் ஐடி நிறுவனத்தின் ரோபோடிக்ஸ் பிரிவில் பணியாற்றி வரும் கொச்சியை சேர்ந்த பொறியாளர் தான் டாக்டர். ரோஷி ஜான் தனது ஒய்வு நேரத்தை பயன்படுத்தி இன்று ஒட்டு மொத்த உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கின்றார். கூகுள் உள்ளிட்ட மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பணியாற்றி வரும் பெரிய திட்டத்தை கையில் எடுத்து சிறிய குழுவை வைத்து கொண்டு அதில் வெற்றி கண்டிருக்கின்றார்.

 
ஆளில்லாமல் இயங்கும் தானியங்கி கார் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் டாட்டா நானோ காரினை ஆளில்லாமல் இயங்க வைத்திருக்கின்றார் இந்த இந்திய பொறியாளர். விலை குறைவு என்பதோடு முன்பக்க என்ஜின் மற்றும் போதிய இட வசதி இருந்ததால் இந்த காரினை தேர்ந்தெடுத்ததாக ஜான் தெரிவித்திருக்கின்றார். 


ஒரு முறை விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்பும் போது அவர் பயணம் செய்த டாக்ஸி ஓட்டுனர் வாகனத்தை இயக்க சிரமம்ப்பட்டதால், வாகனத்தை இவரே வீட்டிற்கு பாதுகாப்பாக எடுத்து வந்திருக்கின்றார். இச்சம்பவத்திற்கு பின் தான் தானியங்கி கார் ஒன்றை உருவாக்க வேண்டும் என இவர் முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட துவங்கினார். ஐந்து ஆண்டு கடுமையான முயற்சிக்கு பின் இந்த திட்டம் வெற்றி கண்டுள்ளது. 



பலகட்ட சோதனைகளுக்கு பின் சோதனை நானோ காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஆக்ட்யூயேட்டர், சென்சார் மற்றும் அவர்களே தயாரித்த மேனுவல் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் போன்றவைகளை புதிய டாட்டா நானோ காரில் பொருத்தி அதனினையும் பல்வித சோதனையில் ஈடுபடுத்தியிருப்பதாக ஜான் தெரிவித்துள்ளார். 

 
இவர்கள் கண்டறிந்திருக்கும் வழிமுறையானது மனித ஓட்டுனர்களை விட அதிக திறன் கொண்டிருப்பதாக ஜான் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உருவான தானியங்கி கார் எப்படி தயாரிக்கப்பட்டது என்பதை விரிவாக விளக்கும் வீடியோவை பாருங்கள்.. 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக