சனி, மார்ச் 05, 2016

தமிழ்நாட்டில் தேவாங்கர்கள்

தமிழ்நாட்டில் தேவாங்கர்கள்

இந்திய நாட்டில் தேவாங்கர்கள் நேபாளம் முதல் கன்னியாகுமரி வரை பரவியிருக்கிறார்கள். கடல் கடந்த நாடுகளிலும் வாழ்கிறார்கள். தமிழ்நாட்டில் தேவாங்கர்கள் எப்பொழுது குடியேறினார்கள் என்று சில கல்வெட்டுகள் நமக்கு தெறிவிக்கின்றன. மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் கீழ்க் கோபுரச் சுவரில் கி.பி.1579 - ம் ஆண்டுக் கல்வெட்டில், இராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்த தேவாங்கர்கள் மீது விதிக்கப் பட்டிருந்த வரி தள்ளுபடி செய்யப்பட்ட செய்தி காணப்படுகிறது.
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் என்னும் ஊரில் தேவாங்கர்கள் மடம் ஒன்று இருக்கிறது. அதில் விஜய நகர அரசன் அச்சுத தேவராயன் ஆட்சியில் கி.பி.1542 - ம் ஆண்டு சாரங்கதேவன் என்னும் பக்தன் தேவாங்கர்களுக்குச் சன்மானம் வழங்கிய செய்தி உள்ளது.
 
தேவாங்கர்களும் நெசவுத் தொழிலும்
தேவாங்க குல மக்களால் நெய்யப்பட்டு புகழ்பெற்ற கைத்தறிப் புடைவகளும் அவைகள் தயாரிக்கப்படும் ஊர்களும்:-
 
காஞ்சிபுரம் - பட்டு புடவை
ஆரணி - பட்டு புடவை
சின்னாலம்பட்டி - சுங்குடி சேலை
நெகமம் - காட்டன் புடவைகள்
கோவை - காட்டன் புடவைகள்
சேலம் - கைத்தறி பட்டுப் புடவைகள் மற்றும் பட்டு வேஷ்டிகள்
இளம்பிள்ளை - கைத்தறி மற்றும் விசைத்தறி புடைவைகள்
சிறுமுகை - பட்டு புடவை
புஞ்சை புளியம்பட்டி, தொட்டம்பாளையம், அரசூர், சத்தியமங்கலம், சாவக்காட்டுபாளையம், ஆலாங்கொம்பு - கோரா காட்டன் மற்றும் சில்க் காட்டன் புடவைகள்
குத்தாம்பள்ளி - கேரளா - வேஷ்டிகள்
கொமாரபாளையம் - விசைத்தறி ஆடைகள்
பள்ளிபாளையம் - விசைத்தறி ஆடைகள்
 
 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக